The Vice President of India Polity study notes PDF in Tamil

Admin
0

 

The Vice President of India TNPSC, TNUSRB exam Polity study notes with PDF in Tamil

துணைக் குடியரசுத் தலைவர்
The Vice President

  • 63வது பிரிவின் படி நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவியைத் துணைக் குடியரசுத் தலைவர் வகிக்கிறார்.
  • அலுவலக முன்னுரிமையின் படி குடியரசுத் தலைவருக்கு அடுத்த தர நிலையில் இவர் உள்ளார். இப்பதவி அமெரிக்க துணைக் குடியரசுத் பதவியைப் தலைவரின் போன்றது.
  • நாட்டின் அரசாங்க நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற இப்பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள்:

இந்திய அரசியலமைப்புச் சட்டம் துணைக்குடியரசுத் தலைவருக்கான தகுதிகளை வகுத்துள்ளது.

  • இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
  • மத்திய அரசிலோ, மாநில அரசிலோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
  • மாநிலங்களவை உறுப்பினராவதற்கான மற்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

தேர்தல் மற்றும் பதவிக்காலம்:

  • சட்டப்பிரிவு 66(1)ன் படி துணைக் குடியரசுத் தலைவர் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் குடியரசுத் தலைவர் போல மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வாக்காளர் குழுமத்தின் மூலம் இவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • துணைக் குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
  • பதவிக்காலம் முடியும் முன்னரே பணித்துறப்பு, இறத்தல், பணிநீக்கம் ஆகிய காரணங்களால் அவரது பதவி முடிவுக்கு வரலாம்.
  • அவர் மீண்டும் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் தகுதி உடையவராவார்.
  • அரசியலமைப்புச் சட்டம் துணைக் குடியரசுத் தலைவர் பதவிக்கான தொடர் வழிமுறைகளை நமக்கு வழங்கவில்லை.
  • இது போன்ற சூழ்நிலைகளில், துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் முடிந்தவரையில் விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • புதிய துணைக் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையின் துணைத் தலைவர் துணைக் குடியரசுத் தலைவரின் பணிகளைச் செய்வார்.

துணைக் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம்:

  • மக்களவையின் மாநிலங்களவையில் ஒப்புதலுடன், பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் துணைக் குடியரசுத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கலாம்.
  • இத்தகைய தீர்மானம் கொண்டு வர குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னரே துணைக் குடியரசுத் தலைவருக்கு ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும்.

துணைக் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகள்:

  • துணைக் குடியரசுத் தலைவர் அவர் வகிக்கும் பதவியின் நிமித்தமாக மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுகிறார். மாநிலங்களவையை முறைப்படுத்துகிறார்.
  • நடவடிக்கைகளை மரபு ஒழுங்கு மாநிலங்களவையின் முறைகளைத் தீர்மானிக்கிறார்.
  • மாநிலங்களவையின் தீர்மானம் அல்லது கேள்விகளை அனுமதிப்பதை முடிவு செய்கிறார்.
  • மிகப் பெரிய பிரச்சனையின்போது அவையின் நடவடிக்கைகளை அவர் ஒத்திவைக்கவும் அல்லது முடிவுக்குக் கொண்டு வரவும் செய்கிறார்.
  • குடியரசுத் தலைவர் உடல்நலக் குறைவால் தனது கடமைகளை ஆற்ற இயலாத போதும் அல்லது நாட்டில் இல்லாத போதும் துணைக் குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவரின் பணிகளைக் கவனிப்பார்.
  • குடியரசுத் தலைவர் பதவியானது, அவரின் பதவித்துறப்பு, இறப்பு, அரசியலமைப்பை மீறிய குற்றச் சாட்டின் மூலம் பதவி நீக்கம் ஆகிய காரணங்களால் காலியாகும் போது துணைக் குடியரசுத் தலைவர் அதிகபட்சமாக ஆறு மாத காலத்திற்கு அவரின் பணிகளைக் கவனிப்பார்.

துணைக் குடியரசுத் தலைவர்கள் பட்டியல்:

  • சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - 1952 - 1962
  • சகீர் ஹுசைன் - 1962 - 1967
  • வி.வி. கிரி - 1967 - 1969
  • கோபால் சுவாமி பாத்தீலால் - 1969 - 1974
  • பசாபந்தி ஜாதவ் - 1974 - 1979
  • எம்.ஹிதயத்துல்லா - 1979 - 1984
  • ஆர். வெங்கடராமன் - 1984 - 1987
  • ஷங்கர் தயாள் சர்மா - 1987 - 1992
  • கே. ஆர். நாராயணன் - 1992 - 1997
  • கிருஷ்ணகாந்த் - 1997 - 2002
  • பைரன் சிங் ஷேகாவத் - 2002 - 2007
  • மொ. ஹமீது அன்சாரி - 2007 - 2017
  • எம். வெங்கையா நாயுடு - 2017 - 2022
  • ஜக்தீப் தங்கார் - 2022 - தற்போது

The Vice President of India TNPSC, TNUSRB Exam Polity Study Notes PDF Free Download Click Below:

Post a Comment

0Comments

Post a Comment (0)
To Top