Preamble of the Indian Constitution
இந்திய அரசியல் அமைப்பின் முகப்புரை
- 'முகவுரை' (Preamble) என்ற சொல் அரசியலமைப்பிற்கு அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக் குறிக்கிறது.
- முதன் முதலில் முகப்புரையை அரசியல் அமைப்பில் வழங்கிய நாடு அமெரிக்கா ஆகும்.
- இது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் இலட்சியங்களை உள்ளடக்கியது. இது அரசியலமைப்பின் சுருக்கம் அல்லது சாராம்சத்தைக் கொண்டது.
- இது பெரும் மதிப்புடன் "அரசியலமைப்பின் திறவுகோல்" என அழைக்கப்படுகிறது.
- இந்திய அரசியல் அமைப்பிற்கு முகவுரை வேண்டும் என்று கூறியவர் ஜவகர்லால் நேரு.
- 13 டிசம்பர் 1946 ல் ஜவகர்லால் நேருவின் அரசியல் நிர்ணய சபையின் குறிக்கோள் தீர்மானத்தினை முன்மொழிந்தார்.
- 1947ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் நாள் இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இந்திய அரசியலமைப்பின் முகவுரை அமைந்துள்ளது.
- முகவுரையானது 1976ஆம் ஆண்டு 42வது அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின்படி திருத்தப்பட்டது. அதன்படி சமதர்மம், சமயச்சார்பின்மை, ஒருமைப்பாடு, என்ற மூன்று புதிய சொற்கள் சேர்க்கப்பட்டன.
- 'இந்திய மக்களாகிய நாம்' என்ற சொற்களுடன் இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடங்குகிறது.
- இது இந்திய அரசியலமைப்புத் தனது அதிகாரத்தை மக்களிடமிருந்து பெறப்பட்டதைத் தெளிவுபடுத்துகிறது. இதிலிருந்து, இந்திய மக்களே இந்திய அரசியலமைப்பின் ஆதாரம் என நாம் கூறமுடியும்.
- இந்தியா ஒரு இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு என நமது அரசியலமைப்பின் முகவுரை கூறுகிறது.
- இந்திய குடிமக்கள் அனைவருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி என அனைத்திலும் பாதுகாப்பு வழங்குவதே இதன் நோக்கமாகும்.
- இந்திய மக்கள் அனைவருக்கும் சுதந்திரமாகச் சிந்தித்தல், உணர்வுகளை வெளிப்படுத்துதல், நம்பிக்கை, சமய வழிபாடு ஆகியவற்றில் சுதந்திரமாக செயல்பட இந்திய அரசியலமைப்பு உத்திரவாதம் அளிக்கிறது.
- தகுதி, வாய்ப்பு ஆகியவற்றில் அனைவருக்கும் சமத்துவத்தை அளிக்கிறது. இந்தியர்களிடையே சகோதரத்துவத்தை வளர்க்க ஊக்கமளிக்கிறது.
- கேசவானந்த பாரதி கேரளா அரசை எதிர்த்து தொடங்கிய வழக்கில் 1973ம் ஆண்டு முன்னுரை அரசியல் அமைப்பின் ஒரு பகுதியே என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்திய அரசியலமைப்பு முன்னுரை (Preamble) சுருக்கம்:
இறையாண்மை (Sovereign):
இந்தியா எந்தவொரு வெளிநாட்டு சக்தியின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல், தனது சொந்த முடிவுகளை தானே எடுக்கும் அதிகாரம் கொண்டது.
சமதர்மம் (Socialist):
சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்யும் ஒரு அமைப்பு.
மதச்சார்பற்ற (Secular):
அரசு எந்த ஒரு மதத்தையும் பின்பற்றாது, அனைத்து மதங்களுக்கும் சமமான அங்கீகாரம் அளிக்கும்.
ஜனநாயகக் குடியரசு (Democratic Republic):
மக்கள் பிரதிநிதிகள் மூலம் ஆளப்படும் ஒரு அரசாங்க அமைப்பு.
நீதி (Justice):
சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான நீதி மக்களுக்கு வழங்கப்படும்.
சமத்துவம் (Equality):
பிறப்பு, இனம், மதம், பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டாமல் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்படும்.
சுதந்திரம் (Liberty):
மக்களின் சிந்தனை, கருத்து மற்றும் வழிபாட்டுச் சுதந்திரம் பாதுகாக்கப்படும்.

