குடியரசுத் தலைவர்
- இந்தியாவின் பெயரளவுத் தலைவர் மற்றும் முப்படைத் தளபதி இவர் ஆவார்.
- அரசின் நிர்வாகத் இந்தியாவின் முதல் குடிமகன்.
- குடியரசுத் தலைவரின் நிர்வாக அதிகாரங்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்பான மந்திரி சபையின்அறிவுரைக்கு உட்பட்டது. 42-வது சட்டத்திருத்தம் மூலம் மந்திரிசபையில்அறிவுரையினை குடியரசுத் தலைவர் ஏற்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.
தகுதிகள் : (விதி 58)
- இந்தியக்குடிமகனாக இருக்க வேண்டும்.
- 35 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
- மக்களவை உறுப்பினருக்கான தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.
- அரசுப் பணியில் இருக்கக்கூடாது. கீழ்கண்டவர்களை தவிர
- குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர்
- மாநில ஆளுநர்
- மத்திய மற்றும் மாநில மந்திரி
தேர்தல் :
- மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- இதில் பாராளுமன்றத்தின் இரு சபை தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்ட சபை உறுப்பினர் (நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் கிடையாது) ஆகியோர்களால் தேர்ந்தெடுக்கிறார்கள்.
- 1992-ம் ஆண்டு 70வது சட்டதிருத்தப்படி மாநிலங்கள் என்பது தலைநகரான டெல்லி மற்றும் யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி ஆகியவையும் இடம் பெறுகிறது.
- இங்கு பிரதிநிதித்துவ ஓட்டு என்பது மாநிலத்திற்கு மாநிலம் அதன் மக்கள் (வாக்காளர் எண்ணிக்கையில் மற்றும் மொத்த சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடுகிறது.
- சூத்திரப்படி, உத்திரப்பிரதேசத்தின் சட்டசபை உறுப்பினர்களின் ஓட்டின் மதிப்பு அதிகமாகவும் சிக்கிம் சட்டசபை உறுப்பினர் ஓட்டு மதிப்பு குறைவாகவும் உள்ளது.
- தேர்தல் விகிதாசார பிரதிநிதித்துவ முறைப்படி ரகசிய ஒற்றை மாற்று வாக்கெடுப்பின் மூலம் நடைபெறுகிறது. ஒரு வேட்பாளர் 50% ஓட்டுக்களைப் பெற்றால் அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
- குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்படும் பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
- குடியரசுத் தலைவர் இந்திய தலைமை நீதிபதியின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுக்கிறார். அவர் இல்லாத சமயத்தில் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார் (ஷரத்து 60/
- இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் வரலாற்றிலேயே 1969ல் வி.வி. கிரி மட்டுமே சுயேட்சை வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1977 ஜூலையில் நீலம் சஞ்சீவ் ரெட்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர், இளமையானவர்.
பதவிக்காலம் மற்றும் சம்பளம் :
- 5 வருட பதவிக்காலம். (இவர் அலுவலகம் சென்ற காலத்திலிருந்து)
- விதி 57-ன்படி ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவராக இயலும்.
- இவர் தனது பதவிக்காலம் முடிவடையும் முன்னர் பதவி விலக விரும்பினால் பதவி விலகல் கடிதத்தை துணைக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கலாம்.
- குடியரசுத் தலைவரின் சம்பளம் 1,50,000/- மாதம் இந்திய தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது.
குற்றம் சுமத்துதல் (விதி 61) :
இவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறினால் மட்டுமே குற்றம் சுமத்த இயலும். குறைந்தது அச்சபையில் நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்களின் கையெழுத்து தேவை. தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன் 14 நாட்கள் அறிக்கை குடியரசுத் தலைவருக்கு கட்டாயம் அனுப்ப வேண்டும். அதன் பிறகு அச்சபை 2/3 பங்கு ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்றினால், பின் இவ்விவாதம் அடுத்த சபைக்குச் செல்கிறது.
ஒரு சபையில் குற்றம் சாட்டப்பட்டபின் அது அடுத்த சபையின் விவாதத்திற்கு செல்கிறது. இச்சமயம் குடியரசுத் தலைவர் தனது பதிலை தானாகவோ (அ) தனது வழக்கறிஞர் மூலமோ தெரிவிக்கலாம். இவ்விவாதத்திற்குப் பின்னர் மற்ற சபையும் 2/3 பங்கு பெரும்பான்மையுடன் மசோதாவை நிறைவேற்றினால், அம்மசோதா எந்த தேதியில் நிறைவேற்றப்பட்டதோ அந்த தேதியில் குடியரசுத் தலைவரை தனது அலுவலக பதவியிலிருந்து நீக்கலாம். நியமன உறுப்பினருக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு.
காலியிடம் அல்லது வெற்றிடம் (விதி 62):
- குடியரசுத் தலைவரின் பதவி காலியாகும்போது (அவரின் இறப்பு. பதவி விலகல் மற்றும் பதவி நீக்கம் போன்ற சமயங்களில் துணைக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் பணியை கவனிக்கிறார். அவரும் இல்லையெனில் இந்தியத் தலைமை நீதிபதியும், அவரும் இல்லையெனில் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியும் இந்தியக் குடியரசுத் தலைவராக செயல்பட இயலும்.
- குடியரசுத் தலைவரின் பதவி காலியான ஆறு மாதத்திற்குள் அப்பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும்.
- இந்திய வரலாற்றிலேயே ஒரே ஒருமுறை மட்டுமே உச்சநீதிமன்ற / இந்திய தலைமை நீதிபதியான நீதிபதி எம். இதயத்துல்லா குடியரசுத் தலைவரின் பணிகளை மேற்கொண்டுள்ளார் (1969).
- நீதிபதி இதயத்துல்லா மட்டுமே இருமுறை குடியரசுத் தலைவராக செயலாற்றியுள்ளார். முதல் 1969 (உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து), அடுத்து 1982-ல் (துணைக் குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து).
நிதித்துறை அதிகாரங்கள்:
- பாராளுமன்றத்தில் உருவாக்கப்படும் அனைத்து பண மசோதாக்களும் இவரின் பரிந்துரையின் அடிப்படையில் மக்களவையில் அறிமுகப்படுத்தப் படுகிறது.
- இவரது ஆலோசனையின்றி எவ்வித மானிய கோரிக்கையும் கோர இயலாது.
- எதிர்பாராத செலவுகள் ஏற்படும் சமயங்களில் இந்திய அரசின் வைப்பு நிதியிலிருந்து முன் பணத்தை இவரால் மட்டுமே எடுக்க முடியும்.
- இவர் நிதிக்குழுவை நியமிக்கிறார். (ஒவ்வொரு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை). அது மத்திய மாநில அரசுகளுக்கு வரிகளை எவ்வாறு பிரித்தளிப்பது என அறிவுரை கூறுகிறது.
நீதித்துறை அதிகாரங்கள்:
- விதி 72 அமைச்சரவையின் ஆலோசனை பேரில் மரண தண்டனை ரத்து செய்யும் அதிகாரம்.
- இவர் சிலவகை (மன்னிப்பளிக்கும் அதிகாரம், மறுபரிசீலனை மறு ஆய்வு மற்றும் தண்டனை குறைப்பு) அதிகாரங்களைப் பெற்றுள்ளார்.
- மேலும் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை நியமிக்கிறார்.
நிர்வாக அதிகாரங்கள்:
- இவர் பிரதமர், மந்திரிகள், உச்சநீதிமன்ற, மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள் தலைவர், உறுப்பினர்கள், கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர்ஜெனரல், அட்டார்னிஜெனரல், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணைய உறுப்பினர்கள், ஆளுநர்கள், நிதிக்குழு உறுப்பினர்கள், தூதர்கள் மற்றும் பிறரை நியமிக்கிறார்.
- இரண்டு மாநிலங்களுக்கு பொதுவான தேர்தல் ஆணையரை குடியரசுத் தலைவர் நியமிப்பார்.
- இவர் இரு அவைகளுக்கும் தகவல் அனுப்பலாம். (ஒரு மசோதா ஏதாவது ஒரு அவையில் வெகுநாட்களாக நிறைவேற்றப்படாமல் தாமதப் படுத்தப்பட்டால்)
- மக்களவை தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி காலியாக இருக்கும் சமயத்தில் ஏதாவது மக்களவை உறுப்பினர் அவைக்கு தலைமை தாங்க நியமிக்க இயலும். (சில சமயங்களில் மாநிலங்களவையிலும்), 12 (ராஜ்யசபை) மாநிலங்களவை உறுப்பினர்களை நியமிக்க இயலும்). ஷரத்து 80
- இரண்டு ஆங்கிலோ - இந்திய சமூக உறுப்பினர்களை மக்களவைக்கு நியமிக்கலாம். (ஒரு வேளை அது தேவையான பிரதிநிதிகளை பெறாத போது) விதி 331
- இவர் பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதி தொடர்பான கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்து விட்டு முடிவெடுக்கிறார்.
- இவர் சில மசோதாக்களில் பாராளுமன்றத்திற்கு அறிவுரை வழங்க இயலும். (எ.கா.: புதிய மாநில உருவாக்கம், மாநில எல்லை மாற்றியமைப்பதை, பண மசோதா, பிற).
- விதி 111 ஒரு மசோதா குடியரசுத் தலைவரிடம் செல்லும் போது (பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்) அதை அவர் சம்மதம் தெரிவிக்கலாம். மசோதாவை தன்னிடமே வைத்துக் கொள்ளலாம் (வீட்டோ அதிகாரம்)
- அதனை திரும்ப அனுப்பலாம் (மறு ஆய்வுக்காக அதுவும் ஒரேயொரு முறை மட்டுமே). (பண மசோதா (அ) அரசியலமைப்பு திருத்த மசோதாவைத் திரும்ப அனுப்ப இயலாது) .
- இவர் பாராளுமன்ற கூட்டம் நடைபெறாத சமயங்களில் அவசர சட்டங்களைப் பிறப்பிக்கலாம். எனினும் பாராளுமன்றம் மீண்டும் கூடிய ஆறு வார காலத்திற்குள் ஒப்புதல் பெற வேண்டும். இல்லையெனில் அச்சட்டம் செல்லாததாகிவிடும். (விதி 123).
நெருக்கடிகால அதிகாரங்கள்:
1. தேசிய நெருக்கடி நிலைப் பிரகடனம் (விதி 352):
- போரினால் இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, வெளிநாட்டு படையெடுப்பின்போது (அ) ஆயுதப் புரட்சியின் போது.
- குடியரசுத் தலைவர் அவசர நிலையை கேபினெட் சபையின் எழுத்துப் பூர்வ ஆலோசனையைப் பெற்ற பின்னரே செயல்படுத்த இயலும் (44 வது சட்டதிருத்தம்) - 1978
- அவசரநிலைப் பிரகடனம் ஒரு மாதத்திற்குள் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அது அங்கீகரிக்கப்பட்டால் ஆறு மாதம் வரை தொடரலாம் (44 வதுசட்டதிருத்தம்) - 1978
- ஒவ்வொரு ஆறு மாதத்திற்குப் பின்னரும் பாராளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்றால் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் தொடரலாம்.
- முதல் நெருக்கடிநிலை நிலை 1962 – இந்தியா - சைனா யுத்தம்
- 2 ம் நெருக்கடி நிலை 1971 - இந்தியா - பாகிஸ்தான் யுத்தம்
- 3 ம் நெருக்கடி நிலை 1975 - உள்நாட்டு கலவரம்
- இவ்வகை அவசர நிலையின் போது குடியரசுத் தலைவர் அடிப்படை உரிமைகளை நிறுத்தி வைக்கலாம். (விதி 20 மற்றும் 21-யைத் தவிர) விதி 359. விதி 19 வெளிநாட்டுப் படையெடுப்பின் போது மட்டுமே நிறுத்தி வைக்கப்படும் விதி 358 (உள்நாட்டு புரட்சியின்போது அல்ல).
2. மாநில நெருக்கடி நிலை (விதி 356):
- மாநில அரசு இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டு செயல்பட தவறும் பொழுது செயல்படுத்தப் படுகிறது.
- மாநில அரசு மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாத போது விதி 365 -ன் படி மாநில ஆட்சியை கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்துதல்,
- மாநில கவர்னரின் அறிக்கையின் படி (மாநில அரசு) அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படவில்லையென கூறும்) அவ்வறிக்கையின் மூலம் குடியரசுத் தலைவர் ஆட்சியை மாநிலத்தில் அமல்படுத்தலாம்.
- குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் இரண்டு மாதத்திற்குள் பாராளு மன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒரு வேளை அங்கீகரிக்கப்பட்டால் அது ஆறு மாதம் வரை நடைமுறையில் இருக்கும். (நடைமுறையான தேதியிலிருந்து.
- இது அதிகபட்சமாக மூன்று வருடம் வரை நீட்டிக்கப்படலாம் (ஒவ்வொரு ஆறுமாத இடைவெளியில் பாராளுமன்ற அங்கீகாரத்துடன்). (இரண்டாம், மற்றும் மூன்றாம் வருடங்களில், தேர்தல் ஆணையம் சான்றளித்தல் கட்டாயமாகும்).
- இந்திரா காந்தி காலத்தில் அதிக முறை பிரகடணப்படுத்தப் பட்டது.
- முதன் முறையாக பஞ்சாப்பில் இந்த மாநில அவசர நிலை பிரகடணப்படுத்தப் பட்டது.
- தமிழ்நாட்டில் இதுவரை நான்கு முறை பிரகடணப்படுத்தப் பட்டுள்ளது.
- 356 விதியை அதிக தடவை கலைக்கப்பட்ட மாநிலம் மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் இந்திய அரசியலமைப்புப் படி செயல்பட இல்லை எனில் 356 விதி படி ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தலாம்.
- ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு செயல்படவில்லை எனில் ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு 92-வது விதி ஆளுநர் ஆட்சியை பிரகடனப்படுத்தலாம்.
3. நிதி நிலை நெருக்கடி நிலை (விதி 360):
- இந்தியாவின் நிதி நிலைப்புத் தன்மை, நம்பகத் தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சமயத்தில் குடியரசுத் தலைவர் நித அவசர நிலைப் பிரகடணப்படுத்தலாம்.
- இவ்வகை நெருக்கடி நிலை இரண்டு மாதத்திற்குள் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
- இவ்வகை நெருக்கடி நிலையின் போது அரசின் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் சம்பளம் மற்றும் படிகளை குறைக்க குடியரசுத் தலைவர் கட்டளையிடலாம்.
- இதுவரை இந்தியாவில் நிதி நெருக்கடி நிலை பிரகடணப்படுத்தப் படவில்லை.
ராணுவ அதிகாரங்கள்:
- இவர்தான் இந்தியாவின் முப்படைத் தலைவர் ஆவார். போர் தொடங்குவதை அறிவிப்பதும் அமைதி லை அறிவிப்பதும் இவரே ஆவார்.
- இவர் ராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை தளபதிகளை நியமிக்கிறார்.
தூதரக அதிகாரங்கள்:
- நாட்டின் சார்பாக சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்கிறார்.
- தூதர்களை நியமிப்பதும், திரும்பப் பெறுவதும் இவரே.
குடியரசு தலைவர்கள் பட்டியல்:
- டாக்டர். ராஜேந்திர பிரசாத் - 26 ஜனவரி 1950 முதல் 13 மே 1962 வரை (முதல் மற்றும் ஒரே இரு முறை பதவி வகித்தவர்)
- டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் - 13 மே 1962 முதல் 13 மே 1967 வரை
- டாக்டர். ஜாகிர் ஹுசைன் - 13 மே 1967 முதல் 3 மே 1969 வரை (பதவியில் இருக்கும் போதே மரணம்)
- வராககிரி வெங்கட்டகிரி - 20 ஆகஸ்ட் 1969 முதல் 24 ஆகஸ்ட் 1974 வரை (முதலில் இடைக்காலத் தலைவர், பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்)
- பக்ருதீன் அலி அஹமது - 24 ஆகஸ்ட் 1974 முதல் 11 பிப்ரவரி 1977 வரை (பதவியில் இருக்கும் போதே மரணம்)
- நீலம் சஞ்சீவ ரெட்டி - 25 ஜூலை 1977 முதல் 25 ஜூலை 1982 வரை
- ஜியாணி ஜெயில் சிங் - 25 ஜூலை 1982 முதல் 25 ஜூலை 1987 வரை
- ஆர். வெங்கடராமன் - 25 ஜூலை 1987 முதல் 25 ஜூலை 1992 வரை
- டாக்டர். சங்கர் தயாள் சர்மா - 25 ஜூலை 1992 முதல் 25 ஜூலை 1997 வரை
- கோச்செரில் ராமன் நாராயணன் - 25 ஜூலை 1997 முதல் 25 ஜூலை 2002 வரை
- டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் - 25 ஜூலை 2002 முதல் 25 ஜூலை 2007 வரை (மிசைல் மேன்)
- பிரதீபா தேவிசிங் பாட்டில் - 25 ஜூலை 2007 முதல் 25 ஜூலை 2012 வரை (முதல் பெண் குடியரசுத் தலைவர்)
- பிரணாப் முகர்ஜி - 25 ஜூலை 2012 முதல் 25 ஜூலை 2017 வரை
- ராம் நாத் கோவிந்த் - 25 ஜூலை 2017 முதல் 25 ஜூலை 2022 வரை
- திரௌபதி முர்மு - 25 ஜூலை 2022 முதல் தற்போது வரை (முதல் பழங்குடியினர் பெண் குடியரசுத் தலைவர்)

