Delhi Sultanate / டெல்லி சுல்தானியம்
டெல்லியை தலைநகராக கொண்டு இந்தியாவை ஆட்சி செய்த பல்வேறு அரசர்கள் மற்றும் அவர்களது வம்சாவளியைச் சேர்ந்த துருக்கிய சுல்தான்களை குறிப்பது டெல்லி சுல்தானியம் ஆகும். இவர்களது ஆட்சிக் காலம் 1206 ஆம் ஆண்டு முதல் 1526 ஆம் ஆண்டு வரை உள்ள கால கட்டங்கள் ஆகும்.
அடிமை வம்சம் (1206 – 1290):
- முதன் முதலில் இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி முகமது கோரி யாழ் கிபி 12ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. அவருக்கு மகன்கள் இல்லாத காரணத்தால் பன்டகன் என்னும் தனி வகை அடிமைகளை பேணினார்.
- பின்நாட்களில் அவர்கள் டில்லியை தலைநகராகக் கொண்டு இந்தியாவில் பெரும் பகுதியை ஆண்டனர்.
- இதன் காரணமாக துருக்கிச் சுல்தான்கள் அடிமைமரபினர் என்றழைக்கப்படுகின்றனர்.
- அவ்வம்சத்தில் முக்கியமான சுல்தான்கள் அடிமைகளாக இருந்து சுல்தான்களாக உயர்ந்தவர்கள். அதனால் அவர்கள் வம்சம் அடிமைமரபு என்றழைக்கப்படுகிறது.
குத்புதீன் ஐபெக் - கி.பி. 1206-1210:
- அடிமை மரபைத் தோற்றுவித்தவர் குதுப்-உத்தீன் ஐ பெக். முகம்மது கோரியிடம் அடிமையாயிருந்து தமது வீரம், திறமையால் படைத்தலைவராக உயர்ந்தார்.
- முதன் முதலில் பெற்ற பதவி அமீர் அங்கூர் (குதிரைப் படைத்தலைவர்) இரண்டாம் தரெயின் போரில் வெற்றி பெற்ற முகம்மது கோரி இந்தியாவில் சில பகுதிகளை குதுப்-உத்-தீன் வசம் ஒப்படைத்தார்.
- முகமது மறைந்து 3 ஆண்டுகளுக்குப் பின் கி.பி. 1206-ல் இந்தியாவின் ஆட்சியாளரானார்.
- டில்லியில் இன்று உயர்ந்து நிற்கும் குதுப்மினாரை கட்ட ஆரம்பித்தவர் குத்புதீன். பின்னர் வந்த இல்துத்மிஷ் என்ற சுல்தானால் கட்டி முடிக்கப்பட்டது. குதுப்மினார்கு வாஜாகுதுப்பின் பாக்தியார்காகி என்ற சுபி துறவியின் நினைவாக கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் துருக்கியர் ஆட்சிக்கு அடிகோலிய குத்ப்-உத்-தீன்ஐ பெக்போலோ விளையாட்டின் போது குதிரை மீதிருந்து தவறி விழுந்து கி.பி. 1210-ல் மறைந்தார்.
இல்தூத்மிஷ் - கி.பி. 1210-36:
- குதுப்-உத்-தீன்ஐ பெக்கிற்கு பின் அவரது மகன் ஆரம் ஷாஆட்சி அமைத்தார். குறுகிய காலமே ஆட்சி புரிந்த இவரை இல்துத்மிஷ் கொன்று விட்டு சுல்தானானார்.
- இவர் ஹாம்சிமரபைச் சார்ந்தவர். குத்புதீனின் அடிமையாக இருந்து அவர் மகளையே மணந்தார். சுல்தானாகும் முன்பு பதானுக்கு ஆளுநராக இருந்தார். டெல்லி சுல்தானியத்திற்கு உண்மையில் அடிகோலியவர் இவரே.
- முன்றாம் தரெயின் போர் கி.பி. 1215 - 16-ல் இல்தூத்மிஷுக்கும் யாதில்ஷாவிற்கும் இடையே நடைபெற்றது.
- கி.பி. 1228-ல் பாக்தாத் கலீபா இல்தூத்மிஷ்சை சுல்தானாக அங்கீகரித்து அதற்கான ஆவணங்களை அளித்தார்.
- கலிபாவின் பெயர் தாங்கிய காசுகளை வெளியிட்டார். டாங்கா எனும் வெள்ளிக் காசை முதலில் அறிமுகப்படுத்தினார்.
- 'நாற்பதின்மர்' என்ற துருக்கியமரபில் நாற்பது பேரை கொண்ட குழுவை ஆரம்பித்தார்.
- இல்துமிஷ் தனது படைகளில் பணியாற்றியோர்க்கு "இக்தாக்களை " வழங்கினார். இக்தா என்பது ராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய உதியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலமாகும்.
இரசியா பேகம் - கி.பி.1236 - 40:
இல்தூத்மிஷ்ஷிற்கு பின் ருக்னுதீன் 7 மாதங்கள் ஆட்சி புரிந்தார். அவருக்கு பின் இல்தூத்மிஷ்ஷின் மகள் இரசியாசுல்தானாகபட்டமேறினார். நான்கு வருடங்கள் ஆட்சி புரிந்தாலும் சிறப்பாக பணிபுரிந்தார். அவருடைய ஆட்சியை வீழ்த்த பல சதி திட்டங்கள் தீட்டப்பட்டன. அல்துனியா தலைமையில் கிளர்ச்சி நடந்தது. இரசியாகிளர்ச்சியை அடக்கி அல்துனியாவையே திருமணம் செய்து கொண்டார். அபீசினிய அடிமை யாகூப் இரசியாவின் மெய்காப்பாளனாக இருந்தார். பின்பு நாற்பதின்மர் குழு இரசியாவையும் அல்துனியாவையும் கைது செய்து கொன்றனர். டில்லி அரியணையில் அமர்ந்த முதல் பெண்மணி இரசியா ஆவார்.
பக்ரம் ஷா- கி.பி.1240 - 42:
இரசியாவிற்கு பின்பு ஆட்சி பீடமேறிய பக்ரம்ஷாவால் நாற்பதின்மர் கலகத்தை அடக்க இயலவில்லை. மங்கோலியர் படையெடுப்பு கி.பி. 1241ல் இந்தியாவை நோக்கி நடந்தது.
அலாவுதீன் மசூத் - கி.பி.1242 - 46:
இவர் காலத்தில் பால்பன், அரசு விவகாரங்களில் அதிகம் தலையிட்டார். பால்பன் நாக்பூர் ஆளுநராக அலாவுதீன் மசூதினால் நியமிக்கப்பட்டார்.
பால்பன் - கி.பி. 1266 - 86:
பல சுல்தானிகளிடம் பணிபுரிந்த பால்பன் தன் மருமகனையே கொன்று விட்டு டில்லி சுல்தானாக பீடமேறினார். இவர் பால்பானி மரபை சார்ந்தவர். இயற்பெயர் பாகனுதீன். இல்தூத்மிஷ்ஷால் அடிமையாக வாங்கப்பட்ட இவர் படிப்படியாக உயர்ந்து இறுதியில் சுல்தானாகவே ஆனார்.
பால்பனின் அரசக் கொள்கைகள்:
- மன்னர் மீது மக்களுக்கு ஒரு வித அச்சம் கலந்த மரியாதை வேண்டும் அதற்காக எப்பொழுதும் அரச உடையிலேயே வலம்வந்தார்.
- கடுமையான மன்னர் என்பதைக் காட்ட எங்கும் எதற்காகவும் சிரிப்பதில்லை என்று முடிவெடுத்து செயல்பட்டார்.
- தமது அவையில் பாரசீக மரபுகளையும், ஆடம்பரங்களையும் வலிய புகுத்தினார் சுல்தானின் காலில் விழுந்து வணங்கல், சுல்தானின் கால்களில் (பாதங்களில்) முத்தமிடல் முதலியவற்றை கடுமையாக அமுல்படுத்தினார்.
- மது அருந்துவதை தடைசெய்தார்.
- நாற்பதின்மர் குழுவின் அதிகாரங்களை குறைத்தார். இறுதியில் அக்குழுவை ஒழித்துக்கட்டினார்.
- தமக்கு எதிராக கலகம் செய்த வங்காள ஆளுநர் துக்ரில் கானை அடக்கினார். அவர் காலத்தில் நடந்த மங்கோலியப் படையெடுப்பை தடுத்து நிறுத்த சிறந்த ஏற்பாடுகள் செய்திருந்தார்.
குஸ்ரு:
பால்பன் குஸ்ருவை வாரிசாக நியமித்தார். ஆனால் டில்லியின் கொத்வால் பஃருதீன்கை குபாத்தை அரியணையில் ஏற்றினார். அவர் நோய் வாய்ப்படவே 3 வயதே நிரம்பிய கையுமார் என்பவரை சுல்தானாக்கினார். பின்பு ஜலால் -உத்-தீன்கில்ஜி இவரை கொன்று விட்டு அரச பதவியை அடைந்தார்.
கில்ஜி மரபினர் - கி.பி.1290 - 1320:
ஜலாலுதீன்ஃபிரோஸ் கில்ஜி- கி.பி.1290 – 96:
- இவரே கில்ஜி வம்சத்தை தோற்றுவித்தவர் ஆவார்.
- அடிமை வம்சம் எனப்பட்ட ஆளும் வம்சத்தினரிடமிருந்த ஆட்சிகில் ஜித்துருக்கியர்களிடம் வந்து சேர்ந்தது. இதன் சுல்தான் ஜலாலுதீன்ஃபிரோஸ் கில்ஜி.
- அவர் தில்லி சுல்தானிடம் வேலைக்குச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து சமனாவின் ஆளுநரானார்.
- மாலிக்துசக்கி இறந்தவுடன் கைகுபாத்தால் இராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
- இவர் சுல்தானாக பதவியேற்ற பொழுது வயது 70. எதிர்ப்புகள் இருந்ததால் தில்லியில் முடிசூட்டிக் கொள்ளாமல் நிலுகிரி என்ற இடத்தில் முடிசூட்டிக் கொண்டு அங்கேயே ஓராண்டு காலம் தங்கியிருந்தார்.
- இவருடைய மருமகனே அலாவுதீன்கில்ஜி. காராவின் ஆளுநராக அலாவுதீனை இவர் நியமித்தார்.
- பல்லாயிரக்கணக்கான தாக்குகள் எனப்படும் கொள்கைக் கூட்டம் பிடிப்பட்டது. அவர்களை சுல்தான் மன்னித்து வங்காளத்திற்கு நாடுகடத்தினார்.
- இவர் காலத்தில் தான் அலாவுதீன்கி.பி. 1294ல் தேவகிரியின் மீது படையெடுத்து வெற்றிகொண்டார்.
- தேவகிரியில் வெற்றி பெற்று காராவுக்குத் திரும்பிய அலாவுதீனைச் சந்திக்க மகிழ்ச்சியுடன் சென்ற ஃபிரோஸ்பாசத்துடன் அலாவுதீனைத் தழுவும் போது கொல்லப்பட்டார்.
அலாவுதீன்கில்ஜி - கி.பி. 1296 - 1316:
- அலாவுதீனின் இயற்பெயர் அலிருர்ஷாப், அரசியலில் தனக்கு எதிர்ப்பாளர்களாய் இருந்தவர்களைக் கடுமையாக அடக்கி ஒடுக்கினார்.
- மங்கோலியரை பல போர்களில் தோற்கடித்து இந்தியாவிற்கு வெளியே துரத்தினார்.
- வடமேற்கு எல்லை நகரக்கோட்டைகள் பலப்படுத்தப்பட்டு இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. இராஜபுதனத்தின் மீது படையெடுத்தார்.
- தென்னிந்தியாவை வெல்ல மாலிக்காபூர் அனுப்பப்பட்டார்.
- கிட்டதட்ட இந்தியா முழுமையும் காஷ்மீர் திருநெல்வேலி நீங்கலாக அலாவுதீன் கில்ஜியின் மாலிக் காபூர்மாளவம், குஜராத் வழியாகச் சென்று அவற்றை அடிபணிய வைத்து தேவகிரியின் யாதவ மன்னர் இராமச் சந்திரயாதவை அனுப்பி வைத்தார்.
- பின்னர் காகதீயர்கள் ஆண்ட வாரங்கல்லை வெற்றி கொண்டார்.
- இராஜா பிரதாபருத்திர தேவர் கப்பம் கட்ட ஒப்புக் கொண்டார்.
- மீண்டும் தென்னாட்டுப் படையெடுப்பு செய்த மாலிக்காபூர் துவார சமுத்திரம், மலபார், மைசூர் பகுதிகளை வென்றார்.
- வீர வள்ளாளர் தோல்வியுற்று ஏராளமான பொருளை அளித்தார்.
- பிறகு மதுரையை வென்று அங்கு ஒரு முஸ்லீம் அரசை நிறுவி இராமேஸ்வரம் வரை சென்று அங்குள்ள கோயிலை சூறையாடி இராமேஸ்வரத்தில் மசூதி ஒன்றையும் கட்டிவிட்டு ஏராளமான பொருள்களுடன் 1311-ல் தில்லி திரும்பினார்.
- கிட்டத்தட்ட காஷ்மீர் முதல் திருநெல்வேலி வரை இந்தியா முழுமைக்கும் அலாவுதீன் கில்ஜியின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தன.
ஆட்சி சீர்திருத்தங்கள்:
அரச பதவியைப் பற்றிய கொள்கையில் அலா-உத்-தீன் தமக்கு முன் ஆட்சி செய்தவர்களின் கருத்துக்களு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தார். அரசியல் விவகாரங்களில் இசுலாமிய சமய ஞானிகள் உலோமாக்கள் தலையிடுவதை எதிர்த்தார்.
நாட்டின் அமைதியின்மைக்கு காரணங்களாக சிலவற்றை கண்டறிந்தார்.
அவை,
- மக்களின் நிலையறியாத மன்னர்களின் அலட்சியம்
- மக்களிடம் காணப்பட்ட குடிப்பழக்கம்
- உயர் குடியினர் தங்களுக்குள் கலப்புத்திருமணம் செய்து கொண்டு மன்னருக்கு எதிராகச் சூழ்ச்சிகள் செய்தல்
- மக்களின் செல்வ செழிப்பு மன்னருக் கெதிராக கலகங்களில் ஈடுபடச் செய்கிறது.
- எனவே அலா-உத்-தீன் தன்னுடைய ஆட்சியை வலுப்படுத்த ஆணைகள் பிறப்பித்தார் அதன் மூலம் நாட்டில் அமைதியை ஏற்படுத்தினார். அவை,
- ஒற்றர்களை நியமித்து அவர்கள் மூலம் நாட்டு நிலையைத் தெரிந்துகொண்டார்.
- மது குடித்தலையும் மது விற்பனைச் செய்தலையும் தடைசெய்தார்.
- சுல்தானின் அனுமதியின் பின்தான் உயர் குடியினர் திருமணம் செய்யலாம்.
- மக்களின் செல்வக் குவிப்பைத் தடுக்க குறிப்பாக இந்துக்கள் மீது கடுமையாக வரிகள் விதித்தார்.
ராணுவ சீர்திருத்தம்:
மங்கோலியர் படையெடுப்பை முறியடிக்கவும் தம் பேரரசை விரிவுபடுத்தவும் படை வலிமை இன்றியமையாதது என்பதை அலா-உத்-தீன் கில்ஜி உணர்ந்தார். அதற்காகப் பல சீர்திருத்தங்களைப் புகுத்தினார். அவைவிரிவாக பின்வருமாறு,
- தேர்ச்சி பெற்ற வீரர்களைத் தாமே நேரில் தேர்ந்தெடுத்தார்.
- அவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கினார்.
- வீரர்களின் பெயர் பட்டியல், அவர்களுடைய ஊதியம், உணவு ஆகியவைகள் அடங்கிய பதிவேடு முறையாக எழுதப்பட்டது.
- குதிரைகளைத் தவறான கணக்கில் காட்டும் வழக்கத்தை தடுக்க அலாவுதீன் குதிரைகளுக்கு சூடுபோடும் அடையாளக்குறியீட்டு முறையைச் செயல்படுத்தினார்.
பொருளாதார சீர்திருத்தம்:
தேவைக்கு அதிகமாகச் செல்வம் ஒருவரிடம் குவிந்திருந்தால் அவர் அரசுக்கு எதிரான கலகம் விளைவிப்பார் என சுல்தான் கருதினார். அதனால் மக்களில் பெரும்பாலோனோர் தங்களின் வருவாயில் பாதிக்கு மேல் அரசுக்கு வரியாக செலுத்த வேண்டியிருந்தது.
- நிலங்கள் அளக்கப்பட்டு தரம் பிரிக்கப்பட்டன. மொத்த விளைச்சலில் 1/2 பங்கு வரி. மேலும் மேய்ச்சல் நிலங்களுக்கும் வரி உண்டு என்று அறிவித்தார்.
- கி.பி. 1303 ல் இன்றியமையாத பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவந்தார்.
- உணவு பொருள்களின் விலைகள் அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டன.
- பொருட்களைப் பதுக்கி விற்பவர்கள் கடும்தண்டனைக்கு உட்பட்டார்கள்.
- வர்த்தகர்களை கவனித்து செய்திகள் அனுப்ப ஒற்றர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
- தலைநகரத்திற்கு வரும் ஒட்டகங்களும், வர்த்தகர்களும் வருகைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.
- பொருட்களின் எடை சரியாக உள்ளதா என கண்காணிக்கப்பட்டது.
- வர்த்தகர்கள் எடையைக் குறைத்து விற்றால் குறைவான எடைக்குச் சமமான சதை அவர்களிடமிருந்து வெட்டப்பட்டது.
- பொருள்கள் வாங்க முன்பணம் வர்த்தகர்களுக்கு அரசாங்கம் கொடுத்து சில இடங்களில் வரிப்பணத்திற்கும் பதிலாக பொருட்கள் வசூலிக்கப்பட்டன.
- அலாவுதீனின் ஆட்சியின் இறுதிக் காலத்தில் மாலிக்காபூரின் வற்புறுத்தலுக்கு உட்பட வேண்டிய நிலையில் இருந்தார்.
- குஜராத், இராசபுதனம், தேவகிரி ஆகிய பகுதிகள் டில்லி சுல்தானின் ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திர நாடுகள்ஆயின.
- கி.பி. 1316-ல்அலாவுதீன் இறந்தார்.
துக்ளக் மரபு - கி.பி.1320 - 1414:
- அலாவுதீன் கில்ஜிக்கு பிறகு டில்லியை ஆண்ட முபாரக்ஷா, குசுருஷா ஆகியோர் மக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை.
- நாட்டின் ஒழுங்கற்ற நிலைமையை சமாளிக்க மக்கள் பஞ்சாபில் உள்ள தீபால்பூர் என்ற இடத்தின் ஆளுநரான காசிமாலிக்கின் உதவியை நாடினர்.
- இவர் கரோனா துருக்கிய மரபினர். இவர் டில்லி மீதுபடையெடுத்து கி.பி. 1320ல் ஆட்சினையைக் கைப்பற்றினார்.
கியாசுதின் துக்ளக் - கி.பி. 1320 - 25:
காசிமாலிக் கியாசுதீன் துக்ளக் என்ற பட்டப்பெயருடன் ஆட்சி அமைத்தார்.
சீர்திருத்தங்கள்:
- அரசிற்கு வரி செலுத்தாமல் முறைகேடாக நிலத்தை அனுபவித்து வருபவரிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றினார்.
- விளைச்சலில் 1/10 பங்கு வரியாகப் பெற்றார்.
- வறட்சிக் காலங்களில் வரி தள்ளுபடி செய்யப்பட்டது.
- ஊழல்களைக் களையப் பொதுப்பணி ஊழியர்க்கு அதிக ஊதியம் கொடுத்தார்.
- தில்லியின் மூன்றாவது நகரமான துக்ளகாபாத் இவரால் அமைக்கப்பட்டது.
- கி.பி. 1325-ல் சந்தேகத்திற்கு இடமான சூழ்நிலையில் பந்தல் மண்டபம் சரிந்து விழுந்து இறந்து போனார்.
முகம்மது பின் துக்ளக் - கி.பி. 1325 - 51:
கியாசுதீன் துக்ளக்கின் மகன் பக்குதின் முகம்மது ஜீனாகான். கி.பி. 1325இல் முகம்மது பின் துக்ளக் என்னும் பட்டப் பெயருடன் அரியணை ஏறினார். இவர் இடைக்கால வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னராவார்.
தோ-ஆப் பகுதி வரி:
- கங்கைக்கும், யமுனைக்கும் இடைப்பட்ட தோ ஆப் பகுதி மீது அதிக வரி விதித்தார்.
- குடியானவர்கள் வறியர்களாகும் அளவிற்கு வரிச்சுமை அமைந்தது. பஞ்சத்தின் காரணமாக ஆயிரக் கணக்கானோர் இறந்தனர்
- பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மக்கள் தப்பிச் செல்ல முயன்றனர். அவ்வாறு சென்ற குடியானவர்களை மீண்டும் தங்கள் நிலங்களுக்கு வரும்படி செய்ய கடுமையான தண்டனை முறைகளை நிறைவேற்றினார்.
- பின்பு நிலமையைப் புரிந்து மக்கள் படும் துன்பங்களை நீக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
- உழவர்களுக்கு முன்பணம் கொடுத்தார். கிணறுகள் தோண்டி உழவர்களுக்கு உதவினார். ஆயினும் அவை காலம் கடந்தவைஆயின.
தலைநகர் மாற்றம் - கி.பி 1327:
முகம்மது பின் துக்ளக்கின் இரண்டாம் திட்டம் டில்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு (தேவகிரி) தலைநகரை மாற்றுதலாகும். நிர்வாக வசதி பாதுகாப்பு காரணம் காட்டி இத்திட்டத்தைச் செயல்படுத்தினார்.
டில்லியில் உள்ள அனைத்து மக்களும் இடமாற ஆணையிட்டார். மனமில்லாமல் மக்கள் மாறினர். நோயால் பலர் வழியிலேயே மாண்டனர். பின்பு திடீரென மனம்மாறி தலைநகரை மீண்டும் டில்லிக்கே மாற்றினார்.
நாணய மாற்றுச் சோதனை - கி.பி. 1329:
- தோ ஆப் பகுதியில் பஞ்சம், தலைநகர் மாற்றம் ஆகிய திட்டங்களால் வருவாய் குறைந்ததை ஈடுசெய்ய சுல்தான் இத்திட்டத்தை புகுத்தினார்.
- இவரை நாணய சீர்திருத்த அரசர் என எட்வர்டு தாமசு அழைக்கிறார்.
- உலோக விலை உயர்விற்குத் தக்கவாறு முகம்மது பின் துக்ளக் கி.பி 1329 – 30களில் அடையாள செம்பு நாணயங்களை வெளியிட்டார்
- ஆனால் இத்திட்டத்தில் அரசு முழு உரிமையை ஏற்காததால் காரணமாக தமக்குத் தேவையான செப்பு நாணயங்களை தன் வீட்டிலேயே செய்து கொண்டனர்.
- அதனால் நாணயங்கள் குவிந்தன. பின்பு இத்திட்டத்தை சுல்தான் வாபஸ் வாங்கிக் கொண்டார்.
பிற சீர்திருத்தங்கள்:
- பல நீர்பாசனத் திட்டங்களை ஏற்படுத்தினார். கிணறுகள் வெட்டப்பட்டன. விவசாயிகளுக்கு கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
- அறிவியல் முறையில் நிலவரி திட்டங்களைச் செயல்படுத்தி உற்பத்தியை அதிகரித்தார்.
- நீதி வழங்குவதில் சுல்தான் நடுநிலையைக்கடைபிடித்தார்.
பிரோஷ் துக்ளக் - கி.பி. 1351-1388:
முகம்மது பின் துக்ளக்கிற்கு பின் வந்த மன்னர் பிரோஷ்ஷா துக்ளக் ஆவார். இவர் முகம்மது பின் துக்ளக்கின் இளைய சகோதரரின் மகன் ஆவார். கி.பி. 1351-ல் டில்லி அரியணை ஏறினார்.
வரிமுறை:
நிலவரியே அரசின் முக்கிய வரியாகும். நிலங்கள் அளக்கப்பட்டு தரத்திற் கேற்றவாறு வரி விதிக்கப்பட்டன. திருக்குரானில் கூறியபடி கீழ்கண்ட வரிகளை பிரோஷ் விதித்தார்.
- காராஜ் (Kharas) – விளைப் பொருளில் 1/10 பங்கு
- ஜாகாட் (Zakat) – சமயப் பணிக்கென வாங்கப்பட்டது.
- ஜிசியா (Jicya) – இசுலாமியர் அல்லாதோர் செலுத்தும் வரி
- காம்சு (Khams) – படையெடுப்பில் கைப்பற்றப்பட்ட பொருள்களில் 1/5 பங்கு
- 5 பெரிய பாசனக் கால்வாய்களை வெட்டினார். தில்லி நகரம் முழுவதும் பல பழத் தோட்டங்கள் அமைத்தார்.
- பிரோஷாபாத், ஜான்பூர், கிஸ்ஸார், பதேஹாபாத் முதலிய நகரங்களைக் கட்டுவித்தார்.
- அசோகரின் இரண்டு தூண்கள்மிரட், தோப்ரா ஆகிய இடங்களிலிருந்து இவர் காலத்தில் டில்லிக்கு கொண்டு வரப்பட்டன.
- அடிமைகளுக்கென தனித் துறையைத் தோற்றுவித்தார்.
- பிரோஸ்ஷாவை பரணி, ஹபீப் முதலி வரலாற்றறிஞர்கள் போற்றுகின்றனர்.
நஸ்ருதின் முகமது துக்ளக்:
1398-ல் தைமூர், இந்தியாவின் மீது படையெடுத்து பல்லாயிரம் பேரை கொலை செய்த போதும், செல்வத்தை கொள்ளையிட்ட போதும் டெல்லியை ஆண்ட சுல்தானியர்.
சையதுகள் மரபு - கி.பி.1414 - 51:
- டில்லியின் சுல்தான் முகம்மது துக்ளக் காலமானதும் உயர் குடியினர் தௌலத் கான் லோடியை டில்லியின் அரசராகத் தேர்ந்தெடுத்தனர்.
- கிசர்கான் என்பவர் மூல்தான் நாட்டையும் அதனை அடுத்துள்ள பகுதிகளையும் தைமூரின் பிரதிநிதியாக ஆண்டு வந்தார்.
- கி.பி. 1414- ல் கிசர்கான் டில்லியைக் கைப்பற்றினார். இவரால் தோற்றுவிக்கப்பட்ட மரபு சையது மரபு எனப்படுகிறது.
- கிசர்கானுக்குப் பிறகு அவரது மகன் முபாரக்ஷா மன்னரானார்.
- அவருடைய ஆட்சிக்காலத்தில் தான் யாகியா பின் அகமது சர்கிண்டி (Yahia Bin Ahmed Sarhindi) அக்காலத்தை அறிய உதவும் தாரீக்கி முபாரக்ஷாஹி என்றநூலை எழுதினார்.
- பின்வந்தவர்கள் – முகம்மது பின்பரீத், அலாவுத்தீன் ஆலம்ஷா ஆவார்.
லோடி மரபு (1451-1526):
- டில்லியில் சையது மரபினைத் தொடர்ந்து லோடி மரபினை நிறுவியவர் பஹ்லோல் கான்லோடி (Bahlul Khan Lodi) ஆவார்.
- லோடி மரபினர் ஆப்கானியர் ஆவார். புகலூல் லோடியின் மகனான நிஜாம்கான் கி.பி. 1489-ல் சிக்கந்தர்ஷா என்ற பெயருடன் அரியணை ஏறினார்.
- கி.பி. 1504-ல் சிக்கந்தர் ஆக்ரா நகரை உருவாக்கினார்.
- இவருக்கு பின் இபுராகிம் லோடி ஆட்சிக்கு வந்தார். இபுராகிம் லோடியே இம்மரபின் கடைசி அரசராவார்.
- கி.பி. 1526ல் பானிபட்டில் இப்ராகிம்லோடிக்கும் பாபருக்கும் இடையே நடந்த போரில் பாபர் வெற்றி பெற்றார். டில்லி சுல்தானிகளின் ஆட்சி முடிவுற்று மொகலாயர் ஆட்சி இந்தியாவில் உதயமானது.

