Citizenship of India (குடியுரிமை)- Polity Study Notes with PDF in Tamil

Admin
0

 

Citizenship of India Polity Study Notes in tamil

Citizenship of India (இந்திய குடியுரிமை):

ஒரு குடிமகன் என்பவர் தான் எந்த சமூகத்தில் வாழ்கிறானோ அச்சமூகத்தின் முழு சுதந்திரத்தையும் அனுபவிப்பவன்.

குடிமகனுக்கு உரிய தகுதிகள்:

பல்வேறு காரணங்களால் ஒரு நபர் ஒரு நாட்டின் குடிமகனுக்கு உரிய தகுதிகள் அடைகிறார். ஒரு நாட்டின் பெற்றோருக்கு பிறப்பதாலும், வேறு நாட்டின் குடியுரிமை உள்ள ஆடவனையோ அல்லது பெண்ணையோமனப்பதாலும் நாட்டின் குடிமகன் என்னும் தகுதி கிடைக்கிறது.

வரையறை:

சிந்தனையாளர் ஸ்டார்க் ஒரு தேசத்தின் அரசு அல்லது தனி நபர்கள் அடங்கிய ஒட்டு மொத்த மக்களின் முடிவுகளை,செயல்பாடுகளை, நலங்களை சட்ட ரீதியாக பாதுகாக்கிறது. இவ்வாறு அரசின் பாதுகாப்புக்கு உரியவர்கள், குடிமக்கள் அவர் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு நாட்டின் அரசுடன் மக்களுக்கு தொடர்பு உள்ளது. பாதுகாப்பை எதிர்பார்ப்பது மக்களின் உரிமை ஆகும். அதே நேரத்தில் நாட்டு அரசின் சட்ட திட்டங்களுக்கு பணிந்து நடக்க வேண்டும். சில கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பென்விக் வரையறை செய்துள்ளார்.

இந்திய குடியுரிமை:

இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் குடியுரிமை குறித்து அரசியல் சட்டப்பிரிவுகள் 5 முதல் 11 வரை விளக்குகின்றன.

இந்திய குடிமகனுக்கு மட்டும் உள்ள உரிமைகள்:

  • மதம் இனம் சாதி பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்துப் பார்ப்பதைதடுப்பது. விதி 15
  • பொது வேலை வாய்ப்பில் சம உரிமை. விதி 16
  • ஆறு சுதந்திரங்களை பெறும் உரிமை. அதாவது பேச்சு, வெளிப்பாடு, கூடுதல், சங்கம் அமைத்தல், நகர்தல், குடியேற்றம் மற்றும் தொழில் ஆகியவை. விதி 19
  • கலாச்சார மற்றும் கல்வி உரிமைகள். விதி 29 மற்றும் 30
  • அத்துடன் குடிமகன் மட்டுமே சில உயரிய பதவியை பெற இயலும். அதாவது குடியரசுத் தலைவர், துணை குடியரசு தலைவர், மாநில ஆளுநர், உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அட்டார்னி ஜெனரல் இன்னும் பிற பதவிகளுக்கு இந்திய குடிமக்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மற்றும் சட்ட சபை உறுப்பினரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் உரிமை மற்றும் மக்களவை, மாநிலங்களவை சட்டப்பேரவை உறுப்பினராகும் உரிமை ஆகியவை குடிமக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டவை ஆகும்.

ஒற்றைக் குடியுரிமை:

  • மாநிலத்துக்கான தனி குடியுரிமை கிடையாது.
  • மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து ஜனவரி 9, 1915ல்இந்தியா திரும்பினார். அண்ணா நாளை வெளி வாழ் இந்தியர் தினம் என அழைக்கப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள குடியுரிமை:

  • இந்தியப் பகுதியில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய பகுதியில் பிறந்தவர்கள். அவரது பெற்றோர்களில் எவராவது இந்தியப் பகுதியில் பிறந்து இருத்தல் வேண்டும். ஐந்து வருடங்களுக்கு குறையாமல் இந்திய பிரதேசத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள் இந்திய குடிமகனாக இயலும்.
  • 1948 ஜூலை 19 அதற்கு முன் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு குடியேறியவர்கள். ஆனால் குடியுரிமை தொடர்பான விவரங்களுக்கான நியமிக்கப்பட்ட அதிகாரியால் குடிமகனாக பதிவு செய்யப்பட்டவர்கள்.
  • மார்ச் 4 க்கு பின்னர் பாகிஸ்தானுக்கு குடியேறியவர்கள் பின் இந்தியாவிற்கு திரும்பி மறுகுடியேற்றம்அடைந்தவர்கள்.
  • அவர் அல்லது அவர்களின் பெற்றோர் அவரின் தாத்தா பாட்டி இந்தியாவில் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
  • ஆனால் வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற எவரும் இந்திய குடியுரிமையை பெற இயலாது.

1955ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம்:

  • இச்சட்டம் குடியுரிமையை பெற ஐந்து வழிகளை அதாவது பிறப்பு, பரம்பரை, பதிவு, நடுநிலை மற்றும் பகுதியில் இணைத்தல் ஆகியவற்றை அளிக்கிறது.
  • இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 11 குடியுரிமை குறித்த சட்டங்களை அதற்கு வகை செய்கிறது. இதனடிப்படையில் பாராளுமன்றம் இந்திய குடியுரிமை சட்டம் 1955 இயற்றியது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்பு இந்தியாவில் குடியிருந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வகை செய்கிறது. 
  • அரசியல் சட்டம் இயற்றப்பட்ட பின் குடியுரிமை வழங்குவது குறித்து இந்திய குடியுரிமை சட்டம் 1955 வகை செய்கிறது.

சட்டத்தின் கீழ் குடியுரிமை பறிப்பு:

குடியுரிமை சட்டம் 1955 மூன்று வகையான குடியுரிமையை இழத்தல் பற்றியும்குறிப்பிடுகிறது. அதாவது மறுத்தல், முடித்தல் மற்றும் கவர்தல் ஆகியவற்றின்மூலம் இழக்க நேரிடலாம்.

குடியுரிமை திருத்தச்சட்டம் 1992:

இச்சட்டப்படி இந்திய தாய்க்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தை இந்திய குடியுரிமையை பெற இயலும்.இதற்குமுன் இந்தியாவிற்கு வெளியில் பிறக்கும் குழந்தையின் தந்தை இந்தியராக இருந்தால் மட்டுமே குடியுரிமை பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

Citizenship (குடியுரிமை) - Polity Study Notes with PDF in Tamil Free Download Click Below:

Post a Comment

0Comments

Post a Comment (0)
To Top