அடிப்படைக் கடமைகள்
- இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் என்பவை முன்னாள் சோவியத் யூனியன் (USSR) அரசியலமைப்பின் தாக்கத்தால் சேர்க்கப்பட்டதாகும்.
- 1976ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி சர்தார் ஸ்வரன் சிங் கமிட்டியை அமைத்து அடிப்படைக் கடமைகள் குறித்து ஆராய பரிந்துரை செய்தது.
- அதன்படி 1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 42வது அரசியல் அமைப்புச் சட்டதிருத்தம் நமது அரசியலமைப்பில் குடிமக்களின் பொறுப்புகள் சிலவற்றைச் சேர்த்தது. இவ்வாறு சேர்க்கப்பட்ட பொறுப்புகளே குடிமக்களின் கடமைகள் என்றழைக்கப்பட்டன.
- மேலும் இந்தச் சட்டத்திருத்தம், அரசியலமைப்பின் பகுதி IV A என்ற ஒரு புதிய பகுதியைச் சேர்த்தது. இந்தப் புதிய பகுதி 51 A என்ற ஒரேயொரு பிரிவை மட்டும் கொண்டது. இது முதன்முறையாக, குடிமக்களின் பத்து அடிப்படைக் கடமைகளை விளக்கும் குறிப்பிட்ட சட்டத் தொகுப்பாக உள்ளது.
அடிப்படைக் கடமைகளின் பட்டியல்:
ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமைகளாக பின்வருவனவற்றை சட்டப்பிரிவு 51 A வலியுறுத்துகிறது.
- ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அரசியலமைப்பு, அதன் கொள்கைகள், நிறுவனங்கள், தேசியகீதம், தேசியக்கொடி, தேசிய சின்னங்கள் ஆகியவற்றை மதித்தல்.
- சுதந்திர போராட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்த உயரிய நோக்கங்களைப் போற்றி வளர்த்தல்.
- இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு இவற்றைப் பேணிப்பாதுகாத்தல்.
- தேசப் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் பொழுது தேசப்பணியாற்ற தயாராயிருத்தல். சமய, மொழி மற்றும் பிராந்திய அல்லது பகுதி சார்ந்த வேறுபாடுகளை மறந்து, பெண்களைத் தரக்குறைவாக நடத்தும் பழக்கத்தை நிராகரித்து, பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் எண்ணங்களை மேம்படுத்தி, இந்திய மக்கள் அனைவரிடையேயும் சகோதரத்துவத்தை வளர்த்தல்.
- நமது உயர்ந்த, பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்து பாதுகாத்தல்.
- காடுகள், ஏரிகள், ஆறுகள், வனவிலங்குகள் மற்றும் உயிரினங்கள் அடங்கிய இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மேம்படுத்தி அவை வாழும் சூழலை ஏற்படுத்துதல்.
- அறிவியல் கோட்பாடு, மனிதநேயம், ஆராய்ச்சி மனப்பான்மை மற்றும் சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தல்.
- வன்முறையைக் கைவிட்டு பொது சொத்துக்களைப் பாதுகாத்தல்.
- தனிப்பட்ட மற்றும் கூட்டுசெயல்பாடுகள் என அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்தவற்றை நோக்கி செயல்பட்டு, தேசத்தின் நிலையான, உயர்ந்த முயற்சி மற்றும் சாதனைக்காக உழைத்தல்.
- 6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை வழங்குதல். (2002இல் இதனை அடிப்படை கடமையாக அறிமுகப்படுத்தியது. இந்த பிரிவின் கீழ் அனைத்து இந்திய குடிமக்கள் அல்லது பெற்றோர்கள் 6 முதல் 14 வயதுள்ள தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி பெறும் வாய்ப்பினை ஏற்படுத்தி தர வேண்டும்).
சட்டப்பூர்வமாக்கப்பட்ட சில அடிப்படைக் கடமைகள்:
- 1860 - இந்திய தண்டனைச்சட்டம்
- 1951 மக்கள் பிரநிதித்துவச்சட்டம்
- 1955 குடியுரிமைச்சட்டம்
- 1972 வனஉயிரி பாதுகாப்புச்சட்டம்
- 1980 - வனப்பாதுகாப்புச்சட்டம்
Fundamental Duties Polity Study Notes in Tamil PDF Free Download Click Below:

