Fundamental Rights (அடிப்படை உரிமைகள்)
அடிப்படை உரிமைகள் என்னும் பிரச்சனை முன்னரே தேசிய விவாதப் பொருளாக இருந்தது. 1931 இல் இந்திய தேசிய காங்கிரஸ் கராட்சியில் சர்தார் வல்லபாய்படேல் தலைமையில் நடந்த மாநாட்டில் அடிப்படை உரிமைகள் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அடிப்படை உரிமைகளுக்கும் சாதாரண சட்ட உரிமைகளுக்கான வேறுபாடுகள்:
சாதாரண சட்ட உரிமை என்பது சாதாரண சட்ட மூலம் பாதுகாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதாவது சட்ட உரிமை மீறல் பாதிக்கப்பட்ட நபர் தனக்கான நிவர்த்தியை கீழ் கோர்ட்டுகள் அல்லது உயர் நீதிமன்றங்களில் மேல்முறையீடு மனுக்கள் மூலம் அணுகலாம் ஆனால் ஒரு அடிப்படை உரிமை மறுக்கப்பட்டால் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்.
சாதாரண சட்ட உரிமையை சட்டமியற்றும் மன்றங்களில் சாதாரண முறை மூலம் மாற்றலாம். ஆனால் அடிப்படை உரிமைகளை அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்படுபவை. அவை முறையான சட்ட திருத்தத்தின் மூலம் மட்டுமே மாற்றம் செய்ய இயலும்.
அடிப்படை உரிமைகளின் தன்மை:
- அடிப்படை உரிமைகள் என்பது அரசின் செயல்பாட்டில் இருந்து மக்களை பாதுகாப்பது மட்டுமே. தனி நபர்களின் செயல்பாட்டில் இருந்து பாதுகாப்பது அல்ல.
- அரசு சில அடிப்படை உரிமைகளை ஆயுதப் படை வீரர்கள், துணை ராணுவத்தினர், காவலர் ஆகியோருக்கு நிர்வாக தேவை அல்லது தேசிய ஒருமைப்பாட்டிற்கான மறுக்க இயலும்.
- தேசிய நெருக்கடியின் போது விதி 20,21 தவிர மற்ற அடிப்படை உரிமைகளை தற்காலிகமாக குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்க இயலும். விதி 359
- வெளிநாட்டு நெருக்கடியின் போது தானாகவே விதி 19 நிறுத்தப்படும். விதி 358
சமத்துவ உரிமை (14 – 18):
- சட்டத்தின் முன் அனைவரும் சமம். எனவே சட்ட ரீதியாக அனைவரும் சமமாக பாதுகாக்கப்பட வேண்டும். சரத்து 14
- சமயம், ஜாதி, பால், இனம் மற்றும் நிறம் அடிப்படையில் எவரையும்ஏற்படுத்தக் கூடாது. சரத்து 15
- பொதுப்பணி மற்றும் வேலைவாய்ப்பு நியமனங்களின்சம வாய்ப்பு அளித்தல். சரத்து 16
- தீண்டாமை ஒழிப்பு,சமுதாயத்தில்பின்தங்கியபிரிவினரின்நலனை பாதுகாத்தல். சரத்து 17
- அரசு அனுமதியின்றி பெரும் இராணுவம் மற்றும் கல்வி தவிர மற்ற பட்டங்களை தடை செய்தல். சரத்து 18
சுதந்திர உரிமைஷரத்து (19 - 22):
- இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 19-இல் சுதந்திர உரிமைக்கு உத்திரவாதம் அதன் குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கிறது. சரத்து 19
- இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒருவரை தகுந்த காரணம் இன்றி கைது செய்வதற்கு தடை விதிக்கிறது. மேலும் ஒரே குற்றத்திற்காக ஒரு முறைக்கு மேல் தண்டிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்துகிறது. யாரையும் சுய விருப்பம் இன்றி சாட்சியாக கட்டாயப்படுத்தக் கூடாது. சரத்து 20
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் தனிமனித வாழ்வு மற்றும் தனிமனித சுதந்திரத்தை உறுதி செய்கிறது. சரத்து 21
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் எவரையும் விசாரணை இன்றி கைது செய்யக் கூடாது என்பதை உறுதி செய்கிறது. (1971 –மிசா, 1985 –தடா, 2002 –பொடா, 2008 –என்.ஐ.எஸ்) சரத்து 22
சுரண்டலுக்கு எதிரான உரிமை:
- ஒருவரை கட்டாயமாகவும் அல்லது ஊதியம் என்று வேலை செய்ய வைத்தல்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. சரத்து 23
- 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாக தொழிற்சாலை மற்றும் சுரங்கத் தொழிலில் அல்லது பாதுகாப்பற்ற பணிகளில்ஈடுபடுவதை தடைசெய்ய சட்டம்வழி செய்கிறது. சரத்து 24
சமய சுதந்திர உரிமை:
- மதத்தை பின்பற்றி பரப்புவதற்கான சுதந்திரம் உண்டு என்று உத்தரவாதம் அளிக்கிறது. சரத்து 25
- மத சடங்குகளை வழிநடத்தவும்நிர்வகிக்கவும் உள்ள உரிமை. சரத்து 26
- குறிப்பிட்ட சமயத்தில் பராமரிப்பிற்கும் வரி செலுத்துவதற்கும் உரிமையை வழங்குகிறது. சரத்து 27
- அரசியலமைப்பு கல்வி நிறுவனங்களில் எந்தவிதமான சமய போதனைகளையோ அல்லது வழிபாட்டை மத நிறுவனங்களை தவிர அரசு நிதி பெறும் கல்வி நிறுவனங்கள் பின்பற்றக் கூடாது என்பதை வலியுறுத்தும் சரத்து. சரத்து 28
பண்பாடு கல்வி உரிமைகள்:
- அரசியலமைப்பு சிறுபான்மையினர் மொழி எழுத்து பண்பாட்டை பாதுகாக்கிறது. சரத்து 29
- சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை நிறுவவும் மற்றும் நிர்வகிக்கவும் உரிமை அளிக்கிறது. சரத்து 30
அரசியலமைப்பிற்கு தீர்வு காணும் உரிமை:
- நமது அரசியலமைப்பு பிரிவு 32 குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படும் போது நேரடியாக மக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து பாதுகாப்பினை பெற உதவுகிறது.
- இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என டாக்டர் பி ஆர் அம்பேத்காரால் குறிப்பிடப்படுகிறது.
கல்வியுரிமை:
- பிரிவு 21 2009 இல் இலவசகட்டாய கல்வி 6 வயதிலிருந்து 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அளிக்க சட்டம் வெளியிட்டுள்ளது.

