Sollum Porulum - Tamil Study Material with PDF

Admin
0

 

Sollum Porulum Tamil Study Material with PDF for TNPSC, TN TET, TN Police Exams

சொல்லும் பொருளும் (Sollum Porulum):

  1. நிருமித்த - உருவாக்கிய
  2. விளைவு - விளைச்சல்
  3. சமூகம் -  மக்கள் குழு
  4. அசதி - சோர்வு 
  5. ஆழிப்பெருக்கு - கடல் கோள் 
  6. ஊழி - நீண்டதொரு காலப்பகுதி 
  7. மேதினி - உலகம்
  8. உள்ளப்பூட்டு - உள்ளத்தின் அறியாமை
  9. திங்கள் - நிலவு
  10. கொங்கு - மகரந்தம்
  11. அலர் - மலர்தல்    
  12. திகிரி - ஆணைச் சக்கரம்
  13. காணி - நில அளவைக் குறிக்கும் சொல்
  14. மாடங்கள் - மாளிகையின் அடுக்குகள்
  15. பொற்கோட்டு - பொன்மயமான சிகரத்தில்
  16. மேரு - இமயமலை
  17. நாமநீர் - அச்சம் தரும் கடல்
  18. அளி - கருணை
  19. சித்தம் - உள்ளம்
  20. இயன்றவரை - முடிந்தவரை 
  21. ஒருமித்து - ஒன்றுபட்டு 
  22. ஒளடதம் - மருந்து
  23. மாசற - குறை இல்லாமல்
  24. சீர் தூக்கின் - ஒப்பிட்டு ஆராய்ந்து
  25. தேசம் - நாடு
  26. தூற்றும்படி- இகழும்படி
  27. மாற்றார் - மற்றவர்
  28. மூத்தோர் - பெரியோர்
  29. நெறி - வழி
  30. மேதைகள் - அறிஞர்கள்
  31. வற்றாமல் - அழியாமல்
  32. நன்றியறிதல் - பிறர் செய்த உதவியை மறவாமை
  33. ஒப்புரவு - பிறருக்கு உதவி செய்தல்
  34. நட்டல் - நட்புக் கொள்ளுதல்
  35. நந்தவனம் - பூஞ்சோலை
  36. பார் - உலகம்
  37. பண் - இசை
  38. இலை - செடியின் இலை
  39. இளை - மெலிந்து போதல்
  40. இழை - நூல் இழை
  41. விலை - பொருளின் மதிப்பு
  42. விளை - உண்டாக்குதல்
  43. விழை - விரும்பு
  44. இழைத்து - பதித்து
  45. ஏரி - குளம்
  46. ஏறி - மேலே ஏறி
  47. கூரை - வீட்டின் கூரை
  48. கூறை - புடவை
  49. வால் - விலங்குகளின் உறுப்பு
  50. வாள் - போர்க்கருவி
  51. கோலம் - வாசலில் போடுவது
  52. கோளம் - பந்தின் வடிவம்
  53. மல்லெடுத்த - வலிமை பெற்ற
  54. சமர் - போர்
  55. நல்கும் - தரும்
  56. கழனி - வயல்
  57. மறம் - வீரம்
  58. எக்களிப்பு - பெருமகிழ்ச்சி
  59. கலம் - கப்பல்
  60. ஆழி - கடல்
  61. கதிர்ச்சுடர் - கதிரவனின் ஒளி
  62. மின்னல்வரி - மின்னல் கோடுகள்
  63. அரிச்சுவடி - அகரவரிசை எழுத்துகள்
  64. தண்டருள் - குளிர்ந்த கருணை
  65. கூர் - மிகுதி
  66. செம்மையருக்கு - சான்றோருக்கு
  67. ஏவல் - தொண்டு
  68. பராபரமே - மேலான பொருளே
  69. பணி - தொண்டு
  70. எய்தும் - கிடைக்கும்
  71. எல்லாரும் - எல்லா மக்களும்
  72. அஞ்சினர் - பயந்தனர் 
  73. கருணை - இரக்கம் 
  74. வீழும் - விழும்
  75. ஆகாது - முடியாது 
  76. நீள்நிலம் - பரந்த உலகம் 
  77. மாரி - மழை 
  78. கும்பி - வயிறு 
  79. பூதலம் - பூமி 
  80. பார் - உலகம்
  81. ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும்
  82. விரதம் - நோன்பு
  83. குறி - குறிக்கோள்
  84. பொழிகிற - தருகின்ற
  85. ஒப்புமை - இணை
  86. அற்புதம் - விந்தை
  87. முகில் - மேகம்
  88. உபகாரி – வள்ளல்
  89. சூரன் - வீரன்
  90. பொக்கிஷம் - செல்வம்
  91. சாஸ்தி - மிகுதி
  92. விஸ்தாரம் - பெரும்பரப்பு
  93. வாரணம் - யானை
  94. பரி - குதிரை
  95. சிங்காரம் - அழகு
  96. கமுகு - பாக்கு
  97. சிற்றில் - சிறு வீடு
  98. கல் அளை - கற்குகை
  99. யாண்டு - எங்கு
  100. ஈன்ற வயிறு - பெற்றெடுத்த வயிறு
  101. மதலை - தூண்
  102. ஞெகிழி - தீச்சுடர்
  103. அழுவம் - கடல்
  104. சென்னி - உச்சி
  105. உரவுநீர் - பெருநீர்ப் பரப்பு
  106. கரையும் - அழைக்கும்
  107. உரு - அழகு
  108. போழ - பிளக்க
  109. வங்கூழ் - காற்று
  110. நீகான் - நாவாய் ஓட்டுபவன்
  111. வங்கம் - கப்பல்
  112. எல் - பகல்
  113. கோடு உயர் - கரை உயர்ந்த
  114. மாட ஒள்ளெரி - கலங்கரை விளக்கம்
  115. எத்தனிக்கும் - முயலும்
  116. வெற்பு - மலை
  117. கழனி - வயல்
  118. நிகர் - சமம்
  119. பரிதி - கதிரவன்
  120. அன்னதோர் - அப்படிஒரு
  121. கார்முகில் - மழைமேகம்
  122. துயின்றிருந்தார் - உறங்கியிருந்தார்
  123. வைப்புழி - பொருள் சேமித்து வைக்கும் இடம்
  124. கோட்படா - ஒருவரால் கொள்ளப்படாது
  125. வாய்த்து ஈயில் - வாய்க்கும்படி கொடுத்தலும்
  126. விச்சை - கல்வி
  127. பிரும்மாக்கள் - படைப்பாளர்கள்
  128. நெடி - நாற்றம்
  129. மழலை - குழந்தை
  130. வனப்பு - அழகு
  131. பூரிப்பு - மகிழ்ச்சி
  132. மேனி -  உடல்
  133. வண்கீரை - வளமான கீரை
  134. முட்டப்போய்   - முழுதாகச் சென்று
  135. மறித்தல் - தடுத்தல்
  136. பரி - குதிரை
  137. கால் - வாய்க்கால், குதிரையின் கால்
  138. மாரி - மழை
  139. வறந்திருந்த - வறண்டிருந்த
  140. புகவா - உணவாக
  141. மடமகள் - இளமகள்
  142. நல்கினாள் - கொடுத்தாள்
  143. முன்றில் - வீட்டின் முன் இடம் (திண்ணை) இங்கு வீட்டைக் குறிக்கிறது.
  144. குழி - நில அளவைப்பெயர்
  145. சாண் - நீட்டல் அளவைப் பெயர்
  146. மணி - முற்றிய நெல்
  147. சீலை - புடவை
  148. மடை - வயலுக்கு நீர் வரும் வழி
  149. கழலுதல் - உதிர்தல்
  150. களை - வேண்டாத செடி
  151. பைங்கூழ் - பசுமையான பயிர்
  152. வன்சொல் - கடுஞ்சொல்
  153. வையம் - உலகம்
  154. வெய்ய - வெப்பக்கதிர் வீசும்
  155. சுடர் ஆழியான் - ஒளிவிடும் சக்கரத்தை உடைய திருமால்
  156. இடர் ஆழி - துன்பக்கடல்
  157. சொல் மாலை - பாமாலை
  158. தகளி - அகல்விளக்கு
  159. ஞானம் - அறிவு
  160. நாரணன் - திருமால்
  161. வித்து - விதை
  162. ஈன - பெற
  163. நிலன் - நிலம்
  164. சாந்தம் - அமைதி
  165. மகத்துவம் - சிறப்பு
  166. பேதங்கள் - வேறுபாடுகள்
  167. தாரணி - உலகம்
  168. தத்துவம் - உண்மை
  169. இரக்கம் - கருணை
  170. நிரந்தரம் - காலம் முழுமையும்
  171. வைப்பு - நிலப்பகுதி
  172. சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்
  173. வண்மொழி - வளமிக்கமொழி
  174. இசை - புகழ்
  175. தொல்லை - பழைமை, துன்பம்
  176. விசும்பு - வானம்
  177. மயக்கம் - கலவை
  178. இருதிணை - உயர்திணை, அஃறிணை
  179. வழாஅமை - தவறாமை
  180. ஐம்பால் - ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
  181. மரபு - வழக்கம்
  182. திரிதல் - மாறுபடுதல்
  183. செய்யுள் - பாட்டு
  184. தழாஅல் - தழுவுதல் (பயன்படுத்துதல்)
  185. தூண்டுதல் - ஆர்வம் கொள்ளுதல்
  186. ஈரம் - இரக்கம்
  187. முழவு - இசைக்கருவி
  188. நன்செய் - நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
  189. புன்செய் - குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
  190. வள்ளைப்பாட்டு - நெல்குத்தும்போது பாடப்படும் பாடல்
  191. பயிலுதல் - படித்தல்
  192. நாணம் - வெட்கம்
  193. செஞ்சொல் - திருந்திய சொல்
  194. முகில் - மேகம்
  195. கெடிகலங்கி - மிக வருந்தி
  196. சம்பிரமுடன் - முறையாக
  197. சேகரம் - கூட்டம்
  198. காங்கேய நாடு - கொங்குமண்டலத்தின் 24 நாடுகளுள் ஒன்று
  199. வின்னம் - சேதம்
  200. வாகு - சரியாக
  201. காலன் - எமன்
  202. மெத்த - மிகவும்
  203. தீர்வன - நீங்குபவை
  204. உவசமம் - அடங்கி இருத்தல்
  205. நிழல்இகழும் - ஒளிபொருந்திய
  206. பேர்தற்கு - அகற்றுவதற்கு
  207. திரியோகமருந்து - மூன்று யோகமருந்து
  208. தெளிவு - நற்காட்சி
  209. திறத்தன - தன்மையுடையன
  210. கூற்றவா - பிரிவுகளாக
  211. பூணாய் - அணிகலன்களை அணிந்தவளே
  212. பிணி - துன்பம்
  213. ஓர்தல் - நல்லறிவு
  214. பிறவார் - பிறக்கமாட்டார்
  215. நித்தம் நித்தம் - நாள்தோறும்
  216. மட்டு - அளவு
  217. சுண்ட - நன்கு
  218. வையம் - உலகம்
  219. பேணுவையேல் - பாதுகாத்தால்
  220. திட்டுமுட்டு - தடுமாற்றம்
  221. கலன் - அணிகலன்
  222. முற்ற - ஒளிர
  223. தடம்  - அடையாளம்
  224. அகம்பாவம் - செருக்கு
  225. பண் - இசை
  226. கனகச்சுனை - பொன் வண்ண நீர்நிலை
  227. மதவேழங்கள் - மதயானைகள்
  228. முரலும் - முழங்கும்
  229. பழவெய் - முதிர்ந்த மூங்கில்
  230. அலந்தவர்- வறியவர்
  231. செறா அமை - வெறுக்காமை
  232. நோன்றல் - பொறுத்தல்
  233. போற்றார் - பகைவர்
  234. கிளை - உறவினர்
  235. பேதையார் - அறிவற்றவர்
  236. மறாஅமை - மறவாமை
  237. பொறை - பொறாமை
  238. வாரி - வருவாய்
  239. எஞ்சாமை - குறைவின்றி
  240. முட்டாது - தட்டுப்பாடின்றி
  241. ஒட்டாது - வாட்டம் இன்றி
  242. வைகுக - தங்குக
  243. ஓதை - ஓசை
  244. வெரீஇ - அஞ்சி
  245. யாணர் - புதுவருவாய்
  246. மறலி - காலன்
  247. கரி - யானை
  248. தூறு - புதர்
  249. அருவர் - தமிழர்
  250. உடன்றன - சினந்து எழுந்தன
  251. வழிவர் - நழுவி ஓடுவர்
  252. பிலம் - மலைக்குகை
  253. மண்டுதல் - நெருங்குதல்
  254. இறைஞ்சினர்- வணங்கினர்
  255. முழை - மலைக்குகை
  256. சீவன் - உயிர்
  257. சத்தியம் - உண்மை
  258. ஆனந்த தரிசனம் - மகிழ்வான காட்சி
  259. வையம் - உலகம்
  260. சபதம் - சூளுரை
  261. மோகித்து - விரும்பி
  262. நமன் - எமன்
  263. சித்தம் - உள்ளம்
  264. நம்பர் - அடியார்
  265. ஈயில் - வழங்கினால்
  266. பகராய் - தருவாய்
  267. ஆனந்தவெள்ளம் - இன்பப்பெருக்கு
  268. பராபரம் - மேலான பொருள்
  269. அறுத்தவருக்கு - நீக்கியவர்க்கு
  270. நிறை - மேன்மை
  271. பொறை - பொறுமை
  272. பொச்சாப்பு - சோர்வு
  273. மையல் - விருப்பம்
  274. ஓர்ப்பு - ஆராய்ந்து தெளிதல்
  275. அழுக்காறு - பொறாமை
  276. மதம் - கொள்கை
  277. இகல் - பகை
  278. மன்னும் - நிலைபெற்ற
  279. குந்த - உட்கார
  280. கந்தம் - மணம்
  281. மிசை - மேல்
  282. விசனம் - கவலை
  283. மா - வண்டு
  284. மது - தேன்
  285. வாவி - பொய்கை
  286. வளர்முதல் - நெற்பயிர்
  287. தரளம் - முத்து
  288. பணிலம் - சங்கு
  289. வரம்பு - வரப்பு
  290. கழை - கரும்பு
  291. கா - சோலை
  292. குழை - சிறு கிளை
  293. அரும்பு - மலர் மொட்டு
  294. மாடு - பக்கம்
  295. நெருங்கு வளை - நெருங்கின்ற சங்குகள்
  296. கோடு - குளக்கரை
  297. ஆடும் - நீராடும்
  298. மேதி - எருமை
  299. துதைந்து எழும் - கலக்கி எழும்
  300. கன்னிவாளை - இளமையான வாளை மீன்
  301. சூடு - நெல் அரிக்கட்டு
  302. சுரிவளை - சங்கு
  303. வேரி - தேன்
  304. பகடு - எருமைக்கடா
  305. பாண்டில் - வட்டம்
  306. சிமயம் - மலையுச்சி
  307. நாளிகேரம் - தென்னை
  308. நரந்தம் - நாரத்தை
  309. கோளி - அரசமரம்
  310. சாலம் - ஆச்சா மரம்
  311. தமாலம் - பச்சிலை மரம்
  312. இரும்போந்து - பருத்த பனைமரம்
  313. சந்து - சந்தன மரம்
  314. நாகம் - நாகமரம்
  315. காஞ்சி - ஆற்றுப் பூவரசு
  316. யாக்கை - உடம்பு
  317. புணரியோர் - தந்தவர்
  318. புன்புலம் - புல்லிய நிலம்
  319. தாட்கு - முயற்சி, ஆளுமை
  320. சமயக் கணக்கர் - சமயத் தத்துவவாதிகள்
  321. பாடைமாக்கள் - பலமொழி பேசும் மக்கள்
  322. குழீஇ - ஒன்றுகூடி
  323. தோம் - குற்றம்
  324. கோட்டி - மன்றம்
  325. பொலம் - பொன்
  326. வேதிகை - திண்ணை
  327. தூணம் - தூண்
  328. தாமம் - மாலை
  329. கதலிகைக் கொடி- சிறுசிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது
  330. காழூன்று கொடி - கொம்புகளில் கட்டும் கொடி
  331. விலோதம் - துணியாலான கொடி
  332. வசி - மழை
  333. செற்றம் - சினம்
  334. கலாம் - போர்
  335. துருத்தி - ஆற்றிடைக்குறை
  336. களர்நிலம் - உவர்நிலம்
  337. நவிலல் - சொல்லல்
  338. வையம் - உலகம்
  339. மாக்கடல் - பெரியகடல்
  340. இயற்றுக - செய்க
  341. மின்னாளை - மின்னலைப் போன்றவளை
  342. மின்னாள் - ஒளிரமாட்டாள்
  343. தணல் - நெருப்பு
  344. தாழி - சமைக்கும் கலன்
  345. அணித்து - அருகில்
  346. தவிர்க்க ஒணா - தவிர்க்க இயலாத
  347. யாண்டும் - எப்பொழுதும்
  348. மூவாது - முதுமை அடையாமல்
  349. நாறுவ - முளைப்ப
  350. தாவா - கெடாதிருத்தல்
  351. மைவனம் - மலைநெல்
  352. முருகியம் - குறிஞ்சிப்பறை
  353. பூஞ்சினை - பூக்களை உடைய கிளை
  354. சிறை - இறகு
  355. சாந்தம் - சந்தனம்
  356. பூவை - நாகணவாய்ப் பறவை
  357. பொலம் - அழகு
  358. கடறு - காடு
  359. முக்குழல் - கொன்றை, ஆம்பல், மூங்கில் ஆகியவற்றால் ஆன குழல்கள்
  360. பொலி - தானியக் குவியல்
  361. உழை - ஒரு வகை மான்
  362. வாய்வெரீஇ - சோர்வால் வாய் குழறுதல்
  363. குருளை - குட்டி
  364. இனைந்து - துன்புறுதல்
  365. உயங்குதல் - வருந்துதல்
  366. படிக்குஉற - நிலத்தில் விழ
  367. கோடு - கொம்பு
  368. கல் - மலை
  369. முருகு - தேன், மணம், அழகு
  370. மல்லல் - வளம்
  371. செறு - வயல்
  372. கரிக்குருத்து - யானைத் தந்தம்
  373. போர் - வைக்கோற்போர்
  374. புரைதப - குற்றமின்றி
  375. தும்பி - ஒரு வகை வண்டு
  376. துவரை - பவளம்
  377. மரை - தாமரை மலர்
  378. விசும்பு - வானம்
  379. மதியம் - நிலவு
  380. தீபம் - விளக்கு
  381. சதிர் - நடனம்
  382. தாமம் - மாலை
  383. தெங்கு - தேங்காய்
  384. இசை - புகழ்
  385. வருக்கை - பலாப்பழம்
  386. நெற்றி - உச்சி
  387. மால்வரை - பெரிய மலை
  388. மடுத்து - பாய்ந்து
  389. கொழுநிதி - திரண்ட நிதி
  390. மருப்பு - கொம்பு
  391. வெறி - மணம்
  392. கழனி - வயல்
  393. செறி - சிறந்த
  394. இரிய - ஓட
  395. சூல் - கரு
  396. அடிசில் - சோறு
  397. மடிவு - சோம்பல்
  398. கொடியனார் - மகளிர்
  399. நற்றவம் - பெருந்தவம்
  400. வட்டம் - எல்லை
  401. வெற்றம் - வெற்றி
  402. அள்ளல் - சேறு
  403. பழனம் - நீர்மிக்க வயல்
  404. வெரீஇ - அஞ்சி
  405. பார்ப்பு - குஞ்சு
  406. நாவலோ - வாழ்த்துச் சொல்
  407. இசைத்தால் - ஆரவாரத்தோடு கூவுதல்
  408. நந்து - சங்கு
  409. கமுகு - பாக்கு
  410. முத்தம் - முத்து
  411. புரிசை - மதில்
  412. அணங்கு - தெய்வம்
  413. சில்காற்று - தென்றல்
  414. புழை - சாளரம்
  415. மாகால் - பெருங்காற்று
  416. முந்நீர் - கடல்
  417. பணை - முரசு
  418. கயம் - நீர்நிலை
  419. ஓவு - ஓவியம்
  420. நியமம் - அங்காடி
  421. நசை - விருப்பம்
  422. நல்கல் - வழங்குதல்
  423. பிடி - பெண்யானை
  424. வேழம் - ஆண்யானை
  425. யா - ஒரு வகை மரம்
  426. பொளிக்கும் - உரிக்கும்
  427. ஆறு - வழி
  428. தண்பெயல் - குளிர்ந்த மழை
  429. விசும்பு - வானம்
  430. ஆர்தருபு - கிடந்த
  431. ஊழி - யுகம்
  432. பீடு - சிறப்பு
  433. ஊழ் - முறை
  434. ஈண்டி - செறிந்து திரண்டு
  435. இருநிலம் - பெரிய நிலம்
  436. நீபவனம் - கடம்பவனம்
  437. அருள் - கருணை
  438. கவரி - சாமரை 
  439. கதலி - வாழை
  440. கதலிகை - துகிற்கொடி
  441. சேக்கை - இருக்கை (ஆசனம்)
  442. நுவன்ற - சொல்லிய
  443. என்னா - அசைச்சொல்
  444. கேள்வியினான் - நூல் வல்லான்
  445. கேண்மையினான்- நட்பினன்
  446. தென்சொல் - இனிய தமிழ்மொழி
  447. தொடுத்த - இயற்றிய
  448. தார் - மாலை
  449. தாரனை - மாலையை அணிந்தவனை
  450. தீம் - இனிய
  451. பனுவல்- நூல் அல்லது பாயிரம்
  452. திரு - மதிப்புமிக்க
  453. ஆலவாய் - மதுரை
  454. முடி - தலை
  455. முனிவு - சினம்
  456. அகத்து உவகை - மனமகிழ்ச்சி
  457. வடபால் - வடக்குத் திசை
  458. தென்பாலோர் - தெற்குத் திசையில்
  459. தமர் - உறவினர்
  460. கானத்து - காட்டில்
  461. இடையூறு, ஊறுபாடு - துன்பம்
  462. மறையவர் - வேதம் ஒதுபவர்கள்
  463. குன்றுதல் - குறைதல்
  464. பிழைத்தல் - தவறுதல்
  465. எந்தாய் - என் தந்தை
  466. மீனவன் - பாண்டிய மன்னன்
  467. வானோர் - தேவர்கள்
  468. ஏத்தினான் - புகழ்ந்துரைத்தான்
  469. இறைஞ்சினான் - கெஞ்சினான்
  470. பிரபஞ்சம் - உலகம்
  471. பிணைத்தல் - கட்டுதல்
  472. நுண்மை - நுட்பம்
  473. பண்டி - வயிறு
  474. அசும்பிய - ஒளிவீசுகின்ற
  475. அரை - இடை (இடுப்பு)
  476. நுதல் - நெற்றி
  477. அம்பவளம் - அழகிய பவளம்
  478. ஆதி - தொன்மை
  479. முச்சி - தலையுச்சிக் கொண்டை
  480. தாது - மகரந்தம்
  481. போது - அரும்பு
  482. பொய்கை - குளம்
  483. மாதவி வேலி - குருகத்தி கொடியினால் ஆன வேலி
  484. பூகம் - கமுகம் (பாக்குமரம்)
  485. தண்டலை - குளிர்ந்த சோலை
  486. கொண்டல், முகில் - மேகம்
  487. முழவு - மத்தளம்
  488. தெண்டிரை - தெளிவான அலைகள்
  489. எழினி - திரைச்சீலை
  490. வீற்றிருக்கும் - அமர்ந்திருக்கும்
  491. வெய்யோன் - சூரியன், பகலவன், கதிரவன்
  492. மேனி - உடல்
  493. சோதி - ஒளி
  494. திரை - அலை
  495. வேழம் - யானை
  496. ஏசுதல் - பழிச்சொல் கூறுதல்
  497. மாயவாழ்வு - பொய்யான வாழ்வு
  498. கறங்கு - காற்றாடி
  499. காலதூதர் - எமனுடைய தூதர்கள்
  500. அருவினை - அரிய செயல்
  501. துப்பு, உரம் - வலிமை
  502. என்பரியும் - எவ்வாறு களைவான்
  503. பதம் - பக்குவம்
  504. வெள்ளி - வெள்ளி நட்சத்திரம்
  505. கடுகி - விரைந்து
  506. புலன், காடு - நிலம்
  507. கார் - மழை
  508. ஏறு - காளைமாடு
  509. நுகத்தடி - உழவுமாடுகளின் கழுத்தில் பூட்டப்படும் மரக்கட்டை
  510.  ஊக்கம் - முயற்சி
  511. கொழுவை - கலப்பை
  512. நாட்டுவோம் - நிலைநிறுத்துவோம்
  513. எண்மரும் - எட்டுபேரும்
  514. பிணித்தல் - கட்டுதல்
  515. அரற்றுதல் - புலம்புதல்
  516. புனல் - நீர்
  517. வடு - காயம்
  518. காவு - காடு
  519. கள் - மது, தேன்
  520. வரை - மலை
  521. வேய் - மூங்கில்
  522. கழனி - வயல்
  523. மை - இருள்
  524. மருள் - அச்சம், மருட்சி
  525. கயல் - மீன்
  526. கைத்தாயர் - செவிலித் தாயார்
  527. நெறி - முறை
  528. பூண்டு - மேற்கொள்ளுதல்
  529. மன்னுயிர் - உலகத்தில் வாழும் உயிரினம்
  530. அருள் - கருணை, இரக்கம்
  531. முகம் - நூன்முகம் (பாயிரம், முன்னுரை)
  532. பனுவல் - நூல்
  533. சுண்ணம் - நறுமணப்பொடி
  534. விரை - நறுமணப்பொருள்
  535. பகர்வனர் - வணிகர்
  536. காருகர் - நெய்பவர்
  537. நுண்வினை - நுட்பமான செயல்
  538. தண் - குளிர்ச்சி
  539.  தூசு - பட்டு
  540. துகிர் - பவளம்
  541. ஆரம் - சந்தனம், பூமாலை
  542. மாசு - குற்றம்
  543. மாசு அறு - குற்றமில்லாத
  544. வெறுக்கை - செல்வம்
  545. வளம் - செழிப்பு 
  546. நனந்தலை - அகன்ற இடம்
  547. மறுகு - தெரு (வீதி)
  548. அருங்கலம் - அணிகலன்
  549. நொடை - விலை
  550. கஞ்சம் - வெண்கலம்
  551. கிழி - துணி
  552. கிடை - பொம்மைகள் செய்யப் பயன்படும் மர அச்சு
  553. மண்ணீடு - சிற்பம்
  554. பால்கெழு - வேறுபட்ட இயல்பு
  555. மறு - குற்றம்
  556. கைவினை - கைத்தொழில்
  557. சாளரம் - சன்னல்
  558. தெருப்புழுதி - தூசுநிறைந்த மண் துகள்
  559. சாயம் - வண்ணம்
  560. இயம்புவது - சொல்வது
  561. ஆக்கல் - உருவாக்குதல்
  562. பற்று - விருப்பம்
  563. பண்டோர் - முன்னோர்
  564. முனைதல் - முயற்சித்தல்
  565. தத்துவம் - மெய்யறிவு
  566. ஏகுதல் - செல்லுதல்
  567. உரைப்பது - கூறுவது

Post a Comment

0Comments

Post a Comment (0)
To Top